தமிழக முதலர் பழனிச்சாமி அவர்கள் 28.02.2021 அன்று அறிவித்த அறிவிப்பான "கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி (6 சவரன்) " என்ற அறிவிப்பை செயல் படுத்த சில சிக்கல் உள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் தேர்தல் விதிப்படி, தேர்தல் காலத்தில் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த கூடாது.
ஆகையால் இந்த தள்ளுபடி அறிவிப்பை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நகைகடன் தள்ளுபடி அறிவிப்பு , மக்களுக்கும் கூட்டுறவு வங்கிக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அறிவிப்பின் பயனாளிகள் :
கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வாங்கிய விவசாயிகள் .
தகுதி :
விவசாயிகள் 6 சவரன் வரை நகை வைத்து கடன் பெற்று இருக்க வேண்டும்.