திட்டத்தின் பெயர்
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள்
பாதுகாப்பு திட்டம்.
ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்-1.
இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம்-2.
பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்
நோக்கம்
ü பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தை ஒழித்திடவும்
ü பெண் சிசு கொலையை ஒழித்திடவும்
ü பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்தவும்
ü குடுப்ப கட்டுபாட்டை ஊக்குவிக்கவும்
ü பெண் சிசுவதையை தடுக்கவும் ஆரம்பிக்கப்பட்டது
உதவித்தொகை
விவரம்
திட்டம்-1
குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை
குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.
திட்டம்-2
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை
வைப்புத்தொகை வழங்கப்படும். (தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகை).
மேலும், இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டு தோறும்
கிடைக்கும் வட்டியை, வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில்
இருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதிகள்
மற்றும் நிபந்தனைகள்
·
ஒரு
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
·
ஆண்
குழந்தை இருத்தல் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
·
பெற்றோர்களில்
ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
·
ஒரு
பெண் குழந்தை எனில் (திட்டம்-1)
ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாகவும்.
·
இரண்டு
பெண் குழந்தைகள் எனில் (திட்டம்-2)
ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு
குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
·
பயனடையும்
குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
·
10 ம் வகுப்பு
எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும்
· விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது
தேவையான ஆவணம்
ü குடும்ப புகைப்படம்
ü ரேஷன் கார்டு / Smart Card
ü வருமான சான்று
ü இருப்பிட சான்று
ü சாதி சான்று
ü குழந்தைகளின் பிறப்பு சான்று
ü பெற்றோரின் வயது சான்று / TC
ü கருத்தடை அறுவை சிகிச்சை சான்று
ü ஆண்வாரிசு இல்லை என்பதற்கான சான்று
இந்த
ஆவணங்களுடன் சிவகாமி
அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை
பூர்த்தி செய்து கொள்ளவும்.
விண்ணப்பம் :
சிவகாமி அம்மையார்
நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை அரசு இ சேவை
மையத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து அந்த விண்ணப்பத்தை சமூக
நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன்
வழியாக விண்ணப்பம் செய்த பிறகு http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp என்ற இணையதளம் வழியாக
விண்ணப்ப
நிலையை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் தவல்களுக்கு
அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகவும்