PF ECR FILE MAKER Available Now ...Click Software Menu Link ..Download Now....For More Update ! Join Telegram !

வாரிசு சான்று


வாரிசுச் சான்றிதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
    ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்.


வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

     ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

  எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.


வாரிசுச் சான்றிதழ் – அவசியம் ?


   நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

  பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.



எங்கே விண்ணப்பிப்பது?

    இசேவை மையம்  அல்லது விட்டிருந்தே விண்ணப்பிக்கலாம்.








        வாரிசுச் சான்றிதழ் அப்பளை செய்யும் போது இறந்தவரின் அடையாள அட்டை, வாரிசுகளின் அடையாள அட்டை , அவர்களின் டி.சி அல்லது பிறந்த சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
   
  கிராம நிர்வாக அதிகாரி , வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை செய்து  பிறகு வாரிசுச் சான்றிதழ் ஆன்லைன் மூலம் Approve செய்யப்படும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?

Ø  இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் 
Ø  இறந்தவரின் முகவரிச்சான்று
Ø  வாரிசுகளின் முகவரிச்சான்று சான்றிதழ்

 முகவரி சான்று
`ஆதார் கார்டு
 வாக்காளர் அடையாள அட்டை
 பான் கார்டு
 ஓட்டுனர் உரிமம்


         மேலும் கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகவும்.