PF ECR FILE MAKER Available Now ...Click Software Menu Link ..Download Now....For More Update ! Join Telegram !

ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவி திட்டம்




 திட்டத்தின் முழுப்பெயர் :


ஈ.வே.ரா மணியம்மையா நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவி திட்டம்


 திட்டத்தின்  நோக்கம்

ஏழை விதவைகளின் மகளின் திருமணத்தினை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வாங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்

 திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்

ü  குடும்ப வருமான ரூ.72000 மேல் இருக்க கூடாது.
ü   திருமண பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
ü   விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்
 திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும் 

 திட்டம் 1 - நிதயுதவி 

ü  25000 ரூபாய் (காசோலை)
ü   4 கிராம் தங்ககாசு
ü  * திட்டம் 1 க்கு கல்வித்தகுதி தேவையில்லை


 திட்டம் 2 - நிதயுதவி 

ü  50000 ரூபாய் (காசோலை)
ü  4 கிராம் தங்ககாசு
ü  திட்டம் 2 க்கு பட்டபடிப்பு படித்து தேர்ச்சி அடைந்திருக்க  வேண்டும்


 தேவையான ஆவணம்

ü  கணவரின் இறப்பு சான்றிதழ்
ü   விதவை சான்றிதழ்
ü   வருமான சான்றிதழ்
ü   விண்ணப்பதாரரின் புகைப்படம்
ü   மணமகளின் வயது சான்றிதழ்
ü   திருமண அழைப்பிதழ்
ü   திருமணத்திற்கு பொருள் வாங்கிய ரசித்து


 மணமகளின் வயது சான்றிதழ்

ü  மாற்றுச்சான்றிதழ்
ü  பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
ü  Birth Certificate


 விண்ணப்பம்


இத்துடன்  ஈ வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதயுதவி திட்டத்திற்க்கான படிவத்தினை பூர்த்தி செய்து அரசு இ சேவை மையத்தில்  ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்த பின்னர் அந்த விண்ணப்பத்தை  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்( Union Office ) சமர்ப்பிக்க வேண்டும்.



 குறிப்பு 

மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வாங்கப்படும் விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால் மணமகள் பெயரில் வாங்கப்படும்


 மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்.